'ஜல்லிக்கட்டு' தொடர்பாக, தமிழக அரசுக்கு இன்று ஜகோர்ட் உத்தரவு

By 
Jakort order to the Tamil Nadu government today regarding 'Jallikattu'

ஜல்லிக்கட்டு போட்டிகளில், நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்கத் தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி, சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேஷன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.

மருத்துவச் சான்றிதழ் :

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது, ஜல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது' என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

அறிவுறுத்தல் :

நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்றும், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Share this story