50,000 ஆண்டுகளுக்கு பிறகு, பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்..
 

By 
earth3

கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் வான்இயற்பியல் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு விஞ்ஞானிகள் வானில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

தற்போது வால்மீன் என்பது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்ததாவது, ஓடுகிளவு எனப்படும் நீண்டகால வால்மீன் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மவுண்டுபலோமேரில் சுவிக்கிடிரான்சியன்ட் பெசிலிட்டி மூலம் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் காலம் 50 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதன்பிறகு தற்போது இந்த வால்மீன் பூமி சுற்றுவட்ட பாதையில் வருகின்றது. இந்த வால் நட்சத்திரத்தை இன்று பார்க்கலாம். கடந்த டிசம்பர் 2022-ம் ஆண்டு முதல் பிரகாசமாக தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி ஜனவரி மாதத்தில் மிகவும் அருகில் நெருங்கி வருகின்றது. இந்த வால்மீனை வெறும் கண்ணால் பார்க்கலாம். கடந்த ஜனவரி 12-ந்தேதி சூரியனில் இருந்து பெரிகோலினை கடந்து பூமி வட்டபாதையில் செல்லும் வால் நட்சத்திரம் பிப்ரவரி 1-ந்தேதி பூமிக்கு அருகே நெருங்கி வரும். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிகழ்வு நடைபெறுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Share this story