இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் மேட்ச் எப்போது?
 

By 
When is the India-England Test match

கொரோனா அச்சத்தால், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கைவிடப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி, கடந்த மாதம் மான்செஸ்டரில் நடக்க இருந்த இங்கிலாந்துக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்தது. 

கொரோனா அச்சத்தால் இந்திய வீரர்கள் பின்வாங்கியதால், இந்த டெஸ்ட் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. 

தொடர்ந்து, பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்த டெஸ்டை வேறொரு நாளில் நடத்துவது என்று இரண்டு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஒப்புக் கொண்டன.

இந்நிலையில், தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இந்த டெஸ்ட் அடுத்த ஆண்டு ஜூலை 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடைபெறும் என்று நேற்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்பு இந்த டெஸ்ட் மான்செஸ்டரில் நடத்த திட்டமிடப்பட்டது. 

இப்போது, அது எட்ஜ்பஸ்டனுக்கு மாற்றப்பட்டு உளளது. 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது. 

டெஸ்ட் போட்டியை தொடர்ந்து, இந்திய அணி அங்கு மூன்று 20 ஓவர் (ஜூலை 7, 9, 10) மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் (ஜூலை 12, 14, 17) விளையாடுகிறது.

Share this story