தோல்விக்கு இதுதான் காரணம்: ரோகித் சர்மா விளக்கம்

By 
This is the reason for the failure Rohit Sharma's explanation

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் துபாயில் நடந்த லீக் ஆட்டத்தில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் 54 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. 

ஆட்டநாயகன் :

166 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 18.1 ஓவர்களில் 111 ரன்னில் முடங்கியது. 

56 ரன்கள் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்ததுடன், 2 விக்கெட்டும் வீழ்த்திய பெங்களூரு அணியின் ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 

ஒரே சீசனில் 2 தடவை :

இந்த ஆண்டின் தொடக்க லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வென்று இருந்தது. 

இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி முதல்முறையாக ஒரே சீசனில் 2 தடவை மும்பையை வீழ்த்தியது.

இது தொடர்பாக,
தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித்சர்மா கூறியதாவது :

 ‘எங்களது பந்து வீச்சு அருமையாக இருந்தது. பெங்களூரு அணியினர் 180 ரன்களை எட்டுவார்கள் என்று நினைத்தோம். ஆனால், எங்களது பந்து வீச்சாளர்கள் அவர்களை நன்றாக கட்டுப்படுத்தினார்கள். 

சொதப்பல் :

பேட்ஸ்மேன்கள் சொதப்பியது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. 

பேட்ஸ்மேன்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படாதது இந்த சீசனில் எங்களுக்கு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. நிலைத்து நிற்கும் பேட்ஸ்மேன் கடைசி வரை தொடர்ந்து ஆடுவதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.

 நான் மோசமான ‘ஷாட்’ ஆடி ஆட்டம் இழந்தேன். அது ஆட்டத்தின் போக்கை மாற்றுவதாக அமைந்ததாக கருதுகிறேன். நாங்கள் ஒருசில விக்கெட்டுகளை இழந்ததும் அவர்கள் எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி அளித்தனர். 

எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான வழியை கண்டுபிடிக்க வேண்டியது அவசியமானதாகும். 

கடந்த காலங்களில் சரிவில் இருந்து நன்றாக மீண்டு வந்து இருக்கிறோம். ஆனால் அதுபோல் இந்த சீசனில் நடக்கவில்லை. 

இஷான் கிஷன் 
திறமையான வீரர். அவர் கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அபாரமாக ஆடினார். அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நாங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். அவருக்கு அதிக நெருக்கடி அளிக்க விரும்பவில்லை. 

சர்வதேச போட்டியில் அடியெடுத்து வைத்து இருக்கும் அவர் இளம் வீரர் ஆவார்’ என்றார்.
*

Share this story