பக்தி என்ன செய்யும்?

By 
What does devotion do?

எது ஒன்றுடன் பக்தியை இணைத்தாலும், அது புனிதத்துவம் பெற்றதாகவும், சிறப்புக் குரியதாகவும் மாறிவிடுகிறது. அவ் வகையில், பக்தியால் சிறப்புப் பெறும் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

* பக்தியோடு இறைவனுக்கு சாதத்தை படைத்து, அதைப் பிறருக்கு கொடுக்கும்போது, பிரசாதமாக மாறிவிடுகிறது.

* பக்தியோடு பட்டினி கிடக்கும்போது, அது விரதம் என்ற பெயரைப் பெறுகிறது.

* தண்ணீரோடு பக்தியை சேர்க்கும் பொழுது, அது புனித தீர்த்தமாகி விடுகிறது.

* பக்தியின் நிமித்தமாக ஆலயங்களுக்கு பயணப்படும்போது, அது யாத்திரையாக மாறுகிறது.

* இறைவனைப் பற்றி பக்தியோடு இசைத்துப் பாடும்போது, அது கீர்த்தனை ஆகிறது.

* வீட்டில் உள்ள அனைவருமே பக்தியில் திளைக்கும்போது, அது கோவிலாகிறது.

* ஒருவருக்காக ஒரு செயலைச் செய்யும்போது, அதில் பக்தி கலந்தால், அந்த செயல் சேவையாகிறது.

* நமது கடமைகளைப் பக்தியோடு செய்யும் போது, அது கர்மவினைப் பயனாக செயல்படுகிறது.

* பிரம்மச்சரியத்தோடு பக்தி இணையும்போது, அங்கே துறவறம் பிறக்கிறது.

* இல்லறத்துடன் பக்தி சேரும்போது, அங்கே ஆன்மீகம் நிலைக்கிறது.

* ஒருவனுக்குள் பக்தி நுழையும்போது, அவன் புனிதனாகிறான்.

அந்த பக்தி அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமிக்கும்போது, அவன் ஞானியாகிறான்.

Share this story