ஸ்ரீ ரங்கம் சொர்க்க வாசல் திறப்பு : பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு
 

By 
Sri Rangam Heaven Gate Opening An important announcement for the devotees

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த 3-ந் தேதி தொடங்கிய வைகுண்ட ஏகாதசி பெருவிழா, வருகிற 24-ந் தேதி வரை நடக்கிறது. 

விழாவின் முக்கிய திருநாளான 14-ந் தேதி செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசியன்று மூலஸ்தானத்தில், இருந்து அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு அதிகாலை 4.45 மணிக்கு பரம பதவாசல் திறக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அதன் வழியாக முறைப்படியான சம்பிரதாயங்களை கடந்து, திருமாமணி ஆஸ்தான மண்டபம் என்று சொல்லப்படுகிற ஆயிரங்கால் மண்டபத்துக்கு காலை 7 மணிக்கு வருகை தந்து, முறைப்படியான பூஜைகள் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் கொரோனா நோய் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, இந்த திருவிழாவுக்கு பக்தர்கள் 14-ந் தேதி அன்று கீழ்க்காணும் விவரப்படி அனுமதிக்கப்படுகிறார்கள்.
 
* மூலவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை, உற்சவர் தரிசனம் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை, பரம பதவாசல் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை. 

* பிரதான வாயில் ரெங்கா ரெங்கா கோபுரம் நுழைவு அனுமதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை. 

இந்த திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், அரசால் வழங்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் பாதுகாப்பாக வருகை புரிந்து, சுவாமி தரிசனம் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.
*

Share this story