இன்றைய ராசி பலன்.! (28.9.2021 : செவ்வாய்க் கிழமை)
நல்ல நேரம்
காலை : 7.45 - 8.45
மாலை : 4.45 - 5.45
ராகு : 3.00 - 4.30
குளிகன் : 12.00 - 1.30
எமகண் : 9.00 - 10.30
சூலம் : வடக்கு
சந்திராஷ்டமம் :
விசாகம், அனுஷம்
மேஷம் : மனதில் சாந்தம் நிலவும். இறைவழி சிந்தனை மேலோங்கும்.
ரிஷபம் : பணியும் பயணமும் நலமாகும். தனவரவு திருப்தி தரும்.
மிதுனம் : கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதானமாய் செயல்படுதல் நல்லது.
கடகம் : செய்தொழில் விருத்தி ஆகும். ஆதாயமும் தேடி வரும்.
சிம்மம் : இலக்கை நோக்கி விரைந்திடுவர். எண்ணிய முயற்சி ஜெயமாகும்.
கன்னி : பணியில் மந்தநிலை நிலவும். உடல்நலனில் கவனம் அவசியம்.
துலாம் : போட்டியாளர்கள் குறுக்கிடுவர். புத்திசாதுர்யமாய் அணுகுதல் சிறப்பாகும்.
விருச்சிகம் : பொருளாதார பற்றாக்குறை ஏற்படும். இருப்பினும் சமாளித்து முடிப்பர்.
தனுசு : அமைதியை மனம் நாடும். பாசம், பரிவு ஆறுதலாகும்.
மகரம் : உழைப்புக்கேற்ற உயர்வு வரும். சமூகத்தில் மதிப்பு உயரும்.
கும்பம் : சந்தோஷ நிகழ்வுகள் நிகழும். சுபகாரியமும் கூடி வரும்.
மீனம் : வேலைப் பளு அதிகரிக்கும். நிர்வாக ஆதரவும் கிட்டும்.